என்னுடைய முதல் பதிவுக்கு கிடைத்த பெரும் (நம்மலா போட்டுக்க வேண்டியதானே எவன் கேக்க போறான்) ஆதரவை கண்டு அடுத்த பதிவை நான் பதிவுலகிற்கு சமர்பிக்கிறேன்.
நான் இப்போ சொல்லவிருப்பது தமிழ்நாட்டுக்கும் குஜராத்துக்கும் உள்ள வேருபாடுகளைத்தான்.நான் குஜராத் பிழைக்க வந்து 5 வருடங்கள் முடிந்து விட்டது.ஒவ்வொரு நாளும் தன்னை புதிதுதாக காட்டுவது தன் இயல்பாக கொண்டு உள்ளது இந்த மாநிலம்.நான் வசிப்பது சூரத்தில்,வந்தது 2006 ஆம் ஆண்டு.இதில் என்ன கொடுமை என்னவென்றால் நான் வந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தபதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் வசமாக மாட்டி கொண்டோம்.நாங்கள் கம்பெனி வழங்கிய அடுக்குமாடி குடிஇருப்பில் தங்க வைக்கபட்டு இருந்தோம்.நான்கு அடுக்கு மாடியில் முதல் ப்ளோர் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டது.வந்த சில மாதங்களிலேயே இவ்வாறு ஏற்பட்டது,எங்கள் குடும்பத்தாரையும் எங்களையும் கவலைக்கு உள்ளாகியது.என்னுடன் இருந்த சில நண்பர்கள் என்னை மிகவும் பயமுறுத்தினார்கள் 1996 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு பரவிய காலரா மற்றும் PLAKE நோய்களே அதற்கு மிக முக்கிய காரணம்.வெள்ளம் குறைய ஆரம்பித்ததும் என்னுடைய நண்பர்கள் ஊருக்கு கிளம்ப ஆரம்பித்தார்கள்.அனால் நான் மற்றும் சிலர் எங்கள் கம்பெனி டவுன்ஷிப்பில் தங்க வைக்கப்பட்டோம்.சரியாக பத்து நாட்கள் கழித்து சூரத் திரும்பிய போது வெள்ளம் வந்ததற்கான ஒரு அடையாளம் கூட காண முடியாத மாதிரி மாறி இருந்தது.சூரத் மாநகராட்சியின் சீரிய உழைப்பால் இது சாத்தியம் ஆனது.
இது மட்டுமா தினமும் இரவு முழுவதும் தெருக்கள் சாலைகள் என அனைத்தையும் சுத்தமாக பெருக்கி எடுக்கிறார்கள்.எனவேதான் CLEANEST CITY என்ற பெயரும் கிடைத்தது.அது மட்டுமா இங்கே சினிமா போஸ்டர்களோ அய்யா அழைக்கிறார் ங்கொய்யா அழைக்கிறார் என்ற கட்சி விளம்பரங்களோ எந்த சுவற்றிலும் காண முடியாது.வைத்தே ஆக வேண்டும் என்றால் முனிசிபல் அதிகாரிகளின் அனுமதி மிகவும் முக்கியம்.தேர்தல் என்றால் இந்த ஊர்தான் எந்த ஒரு அராஜகமும் இல்லை மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக செய்துள்ளார்கள்.எனவேதான் ஒரு துண்டு பிரசுரம் குட இங்கே கொடுக்கப்படுவதில்லை.குஜராத்தின் ஆறு முன்சிபளிலும் நரேந்திர மோதியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று உள்ளார்கள்.நம் மக்கள்தான் பண பட்டுவாடக்கள்,பிரியாணி பொட்டலங்கள் மற்றும் கோர்ட்டர் பாட்டில்கள் இல்லாமல் ஒட்டு போட மாட்டார்கள்.பூரண மதுவிலக்கு இந்தியாவில் எங்கும் செய்ய வேண்டிய புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனால் நம் தமிழ்நாடு அரசின் மிக முக்கிய வருமானமே சாராயக்கடைகள் மூலம்தான் வருகிறது.தொழில் மற்றும் வேலைவாய்ப்பு என்றால் அது இங்கேதான் என்று சொல்லாம் அளவிற்கு எத்தனை பன்னாட்டு நிறுவனங்கள் ESSAR,RELIANCE,SHELL,L&த,CAIRN ETC., அரசுத்துறை நிறுவனங்களான ONGC,GSPC,NTPC,KRIBHCO.இவை சூரத்தில் மட்டும் உள்ளவை இது அல்லாது GEM CUTTING AND TEXTILES மிக முக்கிய தொழிலாக விளங்குகிறது.நமக்குதான் இலவச வேட்டி சேலை,காஸ் அடுப்பு,டிவி,நிலம்,வீடு,காப்பிடு,திருமண உதவி தொகை,அரிசி,போனடட்டி குழந்தை குட்டி எல்லாம் கொடுக்கும் போது நாம் எதற்காக உழைத்து சம்பாரிக்க வேண்டும்.
நாங்கள் இங்கே PARLE POINT என்ற இடத்திற்கு சென்று கொண்டு இருந்த போது அங்கு அப்போதுதான் முதல்வர் வந்து சென்று ஐந்து நிமிடம் ஆகிறது என்று கூறினார்கள்.அனால் நம்ம அப்படியா வரிசையா நின்னு ஒட்டு போட்டு போட்டு வனத்தில் பறக்கும் நம் மந்திரிகளுக்கு சாலையில் போக்குவரத்தை நிறுத்தி உலகுக்கே எடுத்துகாட்டாக விளங்கும் மாநிலம் அல்லவா......தமிழன்டா....
1 comment:
Having suffered from several breakdowns myself, I often found myself not realising what was happening to me until after the event. [url=http://www.mulberryhandbagssale.co.uk]Mulberry Bags[/url] Practice starts at two o'clock in the afternoon, just after the hottest part of the day. [url=http://www.goosecoatsale.ca]canada goose down coat[/url] Okblhsrco
http://www.pandorajewelryvip.co.uk Qjxcpiyyc [url=http://www.officialcanadagooseparkae.com]canada goose coats[/url] pnpcxszrq
Post a Comment