November 20, 2010

எப்பதாண்டா நீங்கல்லாம் திருந்துவீங்க

       என்னுடைய முதல் பதிவுக்கு கிடைத்த பெரும் (நம்மலா போட்டுக்க வேண்டியதானே எவன் கேக்க போறான்) ஆதரவை கண்டு அடுத்த பதிவை நான் பதிவுலகிற்கு சமர்பிக்கிறேன்.

        நான் இப்போ சொல்லவிருப்பது தமிழ்நாட்டுக்கும் குஜராத்துக்கும் உள்ள வேருபாடுகளைத்தான்.நான் குஜராத் பிழைக்க வந்து 5 வருடங்கள் முடிந்து விட்டது.ஒவ்வொரு நாளும் தன்னை புதிதுதாக காட்டுவது தன் இயல்பாக கொண்டு உள்ளது இந்த மாநிலம்.நான் வசிப்பது சூரத்தில்,வந்தது 2006 ஆம் ஆண்டு.இதில் என்ன கொடுமை என்னவென்றால் நான் வந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தபதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் வசமாக மாட்டி கொண்டோம்.நாங்கள் கம்பெனி வழங்கிய அடுக்குமாடி குடிஇருப்பில் தங்க வைக்கபட்டு இருந்தோம்.நான்கு அடுக்கு மாடியில் முதல் ப்ளோர் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டது.வந்த சில மாதங்களிலேயே இவ்வாறு ஏற்பட்டது,எங்கள் குடும்பத்தாரையும் எங்களையும் கவலைக்கு உள்ளாகியது.என்னுடன் இருந்த சில நண்பர்கள் என்னை மிகவும் பயமுறுத்தினார்கள் 1996 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு பரவிய காலரா மற்றும் PLAKE நோய்களே அதற்கு மிக முக்கிய காரணம்.வெள்ளம் குறைய ஆரம்பித்ததும் என்னுடைய நண்பர்கள் ஊருக்கு கிளம்ப ஆரம்பித்தார்கள்.அனால் நான் மற்றும் சிலர் எங்கள் கம்பெனி டவுன்ஷிப்பில் தங்க வைக்கப்பட்டோம்.சரியாக பத்து நாட்கள் கழித்து சூரத் திரும்பிய போது வெள்ளம் வந்ததற்கான ஒரு அடையாளம் கூட காண முடியாத மாதிரி மாறி இருந்தது.சூரத் மாநகராட்சியின் சீரிய உழைப்பால் இது சாத்தியம் ஆனது.
                இது மட்டுமா தினமும் இரவு முழுவதும் தெருக்கள் சாலைகள் என அனைத்தையும் சுத்தமாக பெருக்கி எடுக்கிறார்கள்.எனவேதான் CLEANEST CITY என்ற பெயரும் கிடைத்தது.அது மட்டுமா இங்கே சினிமா போஸ்டர்களோ அய்யா அழைக்கிறார்  ங்கொய்யா அழைக்கிறார் என்ற கட்சி விளம்பரங்களோ எந்த சுவற்றிலும் காண முடியாது.வைத்தே ஆக வேண்டும் என்றால் முனிசிபல் அதிகாரிகளின் அனுமதி மிகவும் முக்கியம்.தேர்தல் என்றால் இந்த ஊர்தான் எந்த ஒரு அராஜகமும் இல்லை மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக செய்துள்ளார்கள்.எனவேதான் ஒரு துண்டு பிரசுரம் குட இங்கே கொடுக்கப்படுவதில்லை.குஜராத்தின் ஆறு முன்சிபளிலும் நரேந்திர மோதியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று உள்ளார்கள்.நம் மக்கள்தான் பண பட்டுவாடக்கள்,பிரியாணி பொட்டலங்கள் மற்றும் கோர்ட்டர் பாட்டில்கள் இல்லாமல் ஒட்டு போட மாட்டார்கள்.பூரண மதுவிலக்கு இந்தியாவில் எங்கும் செய்ய வேண்டிய புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனால் நம் தமிழ்நாடு அரசின் மிக முக்கிய வருமானமே சாராயக்கடைகள் மூலம்தான் வருகிறது.தொழில் மற்றும் வேலைவாய்ப்பு என்றால் அது இங்கேதான் என்று சொல்லாம் அளவிற்கு எத்தனை பன்னாட்டு நிறுவனங்கள் ESSAR,RELIANCE,SHELL,L&த,CAIRN ETC., அரசுத்துறை நிறுவனங்களான ONGC,GSPC,NTPC,KRIBHCO.இவை சூரத்தில் மட்டும் உள்ளவை இது அல்லாது GEM CUTTING AND TEXTILES மிக முக்கிய தொழிலாக விளங்குகிறது.நமக்குதான் இலவச வேட்டி சேலை,காஸ் அடுப்பு,டிவி,நிலம்,வீடு,காப்பிடு,திருமண உதவி தொகை,அரிசி,போனடட்டி குழந்தை குட்டி எல்லாம் கொடுக்கும் போது நாம் எதற்காக உழைத்து சம்பாரிக்க வேண்டும்.









       நாங்கள் இங்கே PARLE POINT என்ற இடத்திற்கு சென்று கொண்டு இருந்த போது அங்கு அப்போதுதான் முதல்வர் வந்து சென்று ஐந்து நிமிடம் ஆகிறது என்று கூறினார்கள்.அனால் நம்ம அப்படியா வரிசையா நின்னு ஒட்டு போட்டு போட்டு வனத்தில் பறக்கும் நம் மந்திரிகளுக்கு சாலையில் போக்குவரத்தை நிறுத்தி உலகுக்கே எடுத்துகாட்டாக விளங்கும் மாநிலம் அல்லவா......தமிழன்டா....

November 13, 2010

ஹிந்தி எவ்வளவு முக்கியம் தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்து பாருங்கடா ஹிந்தி எதிர்ப்பாளர் எச்சகளைகளா....

     
      நான் டிப்ளோமோ முடிக்கும் முன்னேரே ஒரு MNC என்னை விலை பேசி விட்டது.என்னுடுன் சேர்த்து என்  கல்லூரி நண்பர்கள் 7 பேர் விலை பேச பட்டு இருந்தோம்.எனக்கு ரயில் பயண அனுபவம் ஒரு முறைதான் இருந்தது.அதுவும் நான் மிகவும் சிறியவனாக இருந்த போது, ஈரோடில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி சென்று வந்ததுதான்.என் மற்ற நண்பர்களோ ரயிலில் ஏறியது கூட கிடயாது.(நான்தான் அதில் சீனியர் ஆக்கும்).
     ஈரோடில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து சுரத் செல்லும் நவஜீவன் எக்ஸ்ப்ரஸில் செல்ல வேண்டியது திட்டம் ஆகும்.நான் முன்றைய நாளே என் ஊர்கார பையன் அறையில் தங்கி அடுத்த நாள் கிளம்ப சென்னை வந்து சேர்ந்தேன். வீட்டை விட்டு முதல் முறை அதுவும் 1500 கி.மீ பயணம் செய்வது என்னை மிகவும் பதித்து இருந்தது.எனவே சிறிது நெபோலியனையும், மார்கோ போலோவையும் சேர்த்து கொண்டதால் அன்று இரவு உறங்கி விட்டேன்.அடுத்த நாள் காலை ரயில் புறப்பட்டது.யாருக்கும் தேசிய மொழி தெரியாது.சுரத் வருவதற்கு ஒரு 4 அல்லது 5 மணி நேரம் முன்பு ஒரு டீ விற்பவன் வந்தான்.அவனோ கரம்சாய் கரம்சாய் என்று கூவினான்.எங்களுடன் வந்த ஒரு நண்பன் டீ குடிப்போம் என்றான்.எப்படி கேட்பது என்பது தெரியாது..அப்போது ஒரு அறிவுஜீவி நண்பன் "எனக்கு தெரியும்டா" என்றான்.நானோ காபி வேண்டும் என்றேன்.உடனே அவன் டீ விற்பவனிடம் இரண்டு சாய் ஒரு கரம் வேண்டும் என்று அவனுக்கு தெரிந்த ஓட்டை கேட்டு தொலைத்தான்.உடனே அங்கு இருந்த ஹிந்தி தெரிந்த சக பயணிகள் சிரித்து தொலைத்தனர்.
         அதற்கான காரணம் நாங்கள் இங்கே வந்து ஹிந்தி கற்று கொள்ள ஆரம்பித்த  பின்தான் தெரிந்தது.இது என்னுடைய சொந்த அனுபவம்தான்.இதில் என்ன தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் தமிழ்நாட்டில் ஹிந்தி எந்த அரசுப்பள்ளியில்  கற்று தரப்படுகிறது,தாய்மொழியாம் தமிழ் அனைவரும் அறிந்ததே,தேசிய மொழிக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தரபடுவது இல்லை.இங்கே நாங்கள் பட்ட வேதனைகள் நாங்கள் மட்டும் அறிவோம்.எங்களிடம் பேசுபவன் எங்களை திட்டுரானுகளா இல்லை ஒட்டுரானுகாலன்னு கூட தெரியாம அவமான பட்டோம். ஹிந்தி வேண்டாம் என்று சொல்லும் நீ மட்டும் சென்ட்ரலில் ஏன் MP சீட்டு கேக்கற..உன் மகன் கூட பார்லிமெண்ட்ல மானங்கெட்டு போனது ஊரே அறியும்.படித்த இளைங்கர்களுக்கு வேலை வாய்ப்பை செய்து தர வேண்டாம்.தேசிய மொழியை கற்று தர முடியாத ஒரு அரசு இருந்து என்ன பயன்....