November 13, 2010
ஹிந்தி எவ்வளவு முக்கியம் தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்து பாருங்கடா ஹிந்தி எதிர்ப்பாளர் எச்சகளைகளா....
நான் டிப்ளோமோ முடிக்கும் முன்னேரே ஒரு MNC என்னை விலை பேசி விட்டது.என்னுடுன் சேர்த்து என் கல்லூரி நண்பர்கள் 7 பேர் விலை பேச பட்டு இருந்தோம்.எனக்கு ரயில் பயண அனுபவம் ஒரு முறைதான் இருந்தது.அதுவும் நான் மிகவும் சிறியவனாக இருந்த போது, ஈரோடில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி சென்று வந்ததுதான்.என் மற்ற நண்பர்களோ ரயிலில் ஏறியது கூட கிடயாது.(நான்தான் அதில் சீனியர் ஆக்கும்).
ஈரோடில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து சுரத் செல்லும் நவஜீவன் எக்ஸ்ப்ரஸில் செல்ல வேண்டியது திட்டம் ஆகும்.நான் முன்றைய நாளே என் ஊர்கார பையன் அறையில் தங்கி அடுத்த நாள் கிளம்ப சென்னை வந்து சேர்ந்தேன். வீட்டை விட்டு முதல் முறை அதுவும் 1500 கி.மீ பயணம் செய்வது என்னை மிகவும் பதித்து இருந்தது.எனவே சிறிது நெபோலியனையும், மார்கோ போலோவையும் சேர்த்து கொண்டதால் அன்று இரவு உறங்கி விட்டேன்.அடுத்த நாள் காலை ரயில் புறப்பட்டது.யாருக்கும் தேசிய மொழி தெரியாது.சுரத் வருவதற்கு ஒரு 4 அல்லது 5 மணி நேரம் முன்பு ஒரு டீ விற்பவன் வந்தான்.அவனோ கரம்சாய் கரம்சாய் என்று கூவினான்.எங்களுடன் வந்த ஒரு நண்பன் டீ குடிப்போம் என்றான்.எப்படி கேட்பது என்பது தெரியாது..அப்போது ஒரு அறிவுஜீவி நண்பன் "எனக்கு தெரியும்டா" என்றான்.நானோ காபி வேண்டும் என்றேன்.உடனே அவன் டீ விற்பவனிடம் இரண்டு சாய் ஒரு கரம் வேண்டும் என்று அவனுக்கு தெரிந்த ஓட்டை கேட்டு தொலைத்தான்.உடனே அங்கு இருந்த ஹிந்தி தெரிந்த சக பயணிகள் சிரித்து தொலைத்தனர்.
அதற்கான காரணம் நாங்கள் இங்கே வந்து ஹிந்தி கற்று கொள்ள ஆரம்பித்த பின்தான் தெரிந்தது.இது என்னுடைய சொந்த அனுபவம்தான்.இதில் என்ன தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் தமிழ்நாட்டில் ஹிந்தி எந்த அரசுப்பள்ளியில் கற்று தரப்படுகிறது,தாய்மொழியாம் தமிழ் அனைவரும் அறிந்ததே,தேசிய மொழிக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தரபடுவது இல்லை.இங்கே நாங்கள் பட்ட வேதனைகள் நாங்கள் மட்டும் அறிவோம்.எங்களிடம் பேசுபவன் எங்களை திட்டுரானுகளா இல்லை ஒட்டுரானுகாலன்னு கூட தெரியாம அவமான பட்டோம். ஹிந்தி வேண்டாம் என்று சொல்லும் நீ மட்டும் சென்ட்ரலில் ஏன் MP சீட்டு கேக்கற..உன் மகன் கூட பார்லிமெண்ட்ல மானங்கெட்டு போனது ஊரே அறியும்.படித்த இளைங்கர்களுக்கு வேலை வாய்ப்பை செய்து தர வேண்டாம்.தேசிய மொழியை கற்று தர முடியாத ஒரு அரசு இருந்து என்ன பயன்....
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
neengalumaa boss? ivanukala enna panrathu
நானும். கரம் னா என்ன? னு சொல்லவேயில்லயே
ராஜி said...
நானும். கரம் னா என்ன? னு சொல்லவேயில்லயே
வந்ததற்கு நன்றி ராஜி... கரம்னா சூடான டீ என்று அர்த்தம்...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
neengalumaa boss? ivanukala enna panrathu //
ஒண்ணும் பண்ண முடியாதுங்க ...சொல்லத்தான் முடியும்.. இல்லைனா இந்தியாவை விட்டு ஓட வேண்டியதுதான்..
கோபம் தலைக்கேரிவிட்டதோ? இவ்வளவு காரம்
உங்கள் தலைப்பே செருப்பால் அடித்தது போல் இருக்கு
///THOPPITHOPPI said...
கோபம் தலைக்கேரிவிட்டதோ? இவ்வளவு காரம்
உங்கள் தலைப்பே செருப்பால் அடித்தது போல் இருக்கு///
வந்ததற்கு நன்றி..அடிபட்டவனுக்குதன் அதோட வலி தெரியும் தொப்பி அவர்களே..
ரொம்பதான் பட்டிருப்பீங்க போல, தலைப்பே சொல்லுதே....?
சில விஷயங்கள பகிர்ந்துக்க விரும்புரேன்.
1. இந்தி தேசிய மொழி இல்லை (இந்திய அரசியல் சட்டப்படி)
2. சிலருடைய நலனுக்காக அனைவரும் இந்தி கற்றே ஆக வேண்டும் என்பது சரியல்ல. (கட்டாயத்திணிப்பே இங்கு எதிர்க்கப்படுகிறது)
3. அனைவரும் இந்திக் கற்றுக் கொண்டுவிட்டால் இந்தி தேசிய மொழி ஆக்கப்படும். சிவில் சர்வீஸ் தேர்வுகள் முதல் அனைத்தும் இந்தியிலெயெ நடத்தப்படும். நீங்க்ள் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று மூன்று மொழி படிப்பிர்கள், அவர்கள் வெறும் இந்திமட்டும் படிப்பார்கள். யார் தேர்வுகளில் ஈசியாக மார்க் வாங்குவார்கள் என்று யோசித்துப்பாருங்கள்?
இன்னொரு விஷயம், நானும் டெல்லியில் 6 வருடங்கள் இருந்திருக்கிறேன். நீங்கள் அனுபவித்த மொழிப் பிரச்சனைகள், அவமானங்களை நானும் அனுபவித்திருக்கிறேன். அப்படியும் இந்தித்திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை! இன்று பெங்களூர், மும்பை, புனே, ஹைதராபாத் நகரங்கள் தங்கள் தனித்தன்மையை பெருமளவு இழந்துவிட்டன. அந்த மாநிலமக்கள் அவர்களது தலைநகரங்களீலேயே அன்னியப்படுத்தப்பட்டு விட்டனர். காரணம்.. இந்தியே..! இந்திவாலாக்களீன் அதிகப்படியான குடியேற்றத்தின் விளைவே இது, சென்னை இன்னும் நமது நகரமாக இருக்கிறது என்ரால் அதற்கு நாம் இந்தி கற்றுக் கொள்ளாதது ஒரு முக்கியமான காரணம். சென்னையின் தனித்தன்மைக்கும் இதுவே காரணம்!
நன்றி!
(கருத்துக்கள் யாரையெனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்)
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இன்னொரு விஷயம், நானும் டெல்லியில் 6 வருடங்கள் இருந்திருக்கிறேன். நீங்கள் அனுபவித்த மொழிப் பிரச்சனைகள், அவமானங்களை நானும் அனுபவித்திருக்கிறேன். அப்படியும் இந்தித்திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை! இன்று பெங்களூர், மும்பை, புனே, ஹைதராபாத் நகரங்கள் தங்கள் தனித்தன்மையை பெருமளவு இழந்துவிட்டன. அந்த மாநிலமக்கள் அவர்களது தலைநகரங்களீலேயே அன்னியப்படுத்தப்பட்டு விட்டனர். காரணம்.. இந்தியே..! இந்திவாலாக்களீன் அதிகப்படியான குடியேற்றத்தின் விளைவே இது, சென்னை இன்னும் நமது நகரமாக இருக்கிறது என்ரால் அதற்கு நாம் இந்தி கற்றுக் கொள்ளாதது ஒரு முக்கியமான காரணம். சென்னையின் தனித்தன்மைக்கும் இதுவே காரணம்!
நன்றி!
(கருத்துக்கள் யாரையெனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்)\\\
தாங்கள் சொல்லுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.இருப்பினும் நம் நாட்டு மக்களை ஹிந்திவாலா,தமிழன்,மலையாளி என்று என்னால் பிரித்து பார்க்க முடியவில்லை.ஆரம்பம் முதலே ஆங்கிலத்துக்கு கொடுத்த இடத்தில ஹிந்திக்கும் ஒரு இடம் கொடுத்திருந்தால் நாமும் இ( ஹி)ந்தியவாலாக்கள் ஆகியிருப்போம்.யாதும் ஊரே யாவரும் கேளிர்....
Post a Comment